Breaking News

புனித சேவியர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

 


தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் இம்மானுவேலின் மாணவரும், புனித சேவியர்ஸ் பள்ளி தலைமை ஆசிரியருமான ஹென்றி ஸ்டீபன் பணி நிறைவு பாராட்டு விழா ஈஸி பிட்னஸ் போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது.

தூத்துக்குடி புனித சேவியர்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன் பணி நிறைவு பாராட்டு விழா தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அகாடமியின் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார். பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி தலைமை நிர்வாகி ஜான் கென்னடி தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். தொடர்ந்து செய்தியாளர் ரவி, கண்ணன், ஜோசப் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கராத்தே மாஸ்டர் சிவபெருமாள், வீராங்கனை சோபி ஆகியோர் ஆசிரியர் ஹென்றி ஸ்டீபனுக்கு நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ. மாணவியருக்கு ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன் பரிசுகள் வழங்கி உடற்பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் இம்மானுவேலிடம் பயிற்சி பெற்று வரும் தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன் இளைஞர்களுக்கு இணையாக 100 மீட்டர் தூரத்தை 13 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!